விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் |
யசோதா படத்தை அடுத்து தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து அவர் கூறுகையில், இந்த சாகுந்தலம் படத்தின் கதையை இயக்குனர் என்னிடத்தில் சொன்னபோது அதில் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். காரணம் சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு பயமாக இருந்தது. எனக்குள் அந்த கம்பீரம், தேஜஸ் இருக்காது என்று நினைத்தேன். என்றாலும் இயக்குனர் என்னை வற்புறுத்தி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதோடு எனது கதாபாத்திரம் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியாது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டாலும், அந்த கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்றும் நான் எனக்குள் ஒரு முடிவு செய்து கொள்வேன். என்னுடைய பயத்தை தாண்டி வெற்றி பெற முயற்சி செய்வேன். என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் இப்படித்தான் நான் செயல்பட்டு வந்திருக்கிறேன். ஒரு நடிகையாக எனது முன்னேற்றத்திற்கு காரணமே இந்த பயம்தான் என்றும் தெரிவித்திருக்கிறார் சமந்தா.